புயல் வரும் முன் வரும் இடி அவள்! - ஜவான் நாயகி நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்டார் ஷாருக்கான்.
ஜவான் புதிய போஸ்டர்! வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த அதிரடி அவதாரத்தில் நயன்தாராவை காண தயாராகுங்கள்!
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான 'ஜவான்', அதன் வளர்ந்து வரும் பிரபலத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.
ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி: நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் லீட், சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
“ஜவான்” முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்மு...
தி லிப் பாம் கம்பெனி தன்னுடைய முதல் பிறந்தநாளை கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா மற்றும் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
வீகன் லிப் பாம்ஸ், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட டிண்ட்ஸ், கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைப் பெற்றுள்ள பெண்களுக்கு ஏற்ற வகையிலான லிப் பாம்ஸ், குழந்தைகளுக்கான பாதுகாப்பான லிப் பாம்ஸ், மியூட்டோஜெனிக் இல்லாத லிப் பாம்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இல்லாதவை, பேக்கேஜிங்கில் சிறந்தவை, மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான மினி வெர்ஷன்ஸ், சன் புரொடக்ஷன் உள்ள லிப் பாம்ஸ், ஆண்டி ஏஜிங் வகையிலானது, கேட்ஜெட் அதிகம் உபயோகிப்பவர்களுக்கான லைஃப்ஸ்டைல் லிப் பாம்ஸ் என பல உறுதிகளை 'தி லிப் பாம் கம்பெனி' ஆரம்பித்த நாளில் உறுதி கொடுத்தது.
இந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் லிப் பாம் கம்பெனி தற்போது எவர் ஒருவர் பாதுகாப்பான மற்றும் தரமான லிப் பாம் வேண்டும் எனத் தேட...
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.
திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்...
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார்.
அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார்.
மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.
...
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்....
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்துவாக்குல ரெண்டு காதல்”.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார்.
இப்படத்தினை ரெ...
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”.
விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த டிரைலர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது.
இந்நிலையில் டிரைலர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான...
சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது.
அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை...
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்...