செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: vishal

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு அவகாசம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு அவகாசம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான விஷால், இந்த உத...
வைரலாகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வைரலாகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (29.08.2022) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://twitter.com/gvprakash/status/1563773862999105537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembe...
படப்பிடிப்பில்  நடிகர் விஷாலுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது விஷால் காயமடைந்த நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது....
தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறும்போது, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும். அந்த நிதியை எப்படி திரட்டுவது என்று ஆலோசித்தோம். வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வாங்கி இருக்கிறோம். விரைவில் கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்போம். உள் அ...
விஷாலின் 34- பட  தகவல் வெளியாகி உள்ளது!

விஷாலின் 34- பட தகவல் வெளியாகி உள்ளது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது லத்தி, துப்பறிவாளன்-2, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இது போலீஸ் கதை, துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் விலகியதால் விஷாலே அந்த படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து நடிக்க உள்ள ‘மார்க் ஆண்டனி’ விஷாலுக்கு 33-வது படம். இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள 34-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை முத்தையா டைரக்டு செய்ய இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால் நடித்து 2016-ல் வெளியான மருது படத்தை முத்தையா இயக்கி இருந்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இது அதிரடி சண்டை படமாக உருவாக இருப்பத...
20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்… 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் – நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு

20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்… 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் – நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
    20 கோடி தேவை  கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்... 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் - நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு   https://youtu.be/9yCFTNnCmIE
சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தயா...
நடிகர் விஷாலின் ஸ்னீக் பீக் விடியோ!

நடிகர் விஷாலின் ஸ்னீக் பீக் விடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, பாபுராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்து என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் அறிவிக்கப்பட்டபடி 26-ந்தேதி வெளியாகவில்லை. பிறகு இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதா...
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை உறுதி செய்து தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘எனிமி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மிரட்டும் ட்ரெய்லரும் யுவனின் இசையும் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது.   கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ’வீரமே வாகை சூடும்’ வெளியாகவிருந்த நிலையில், கொரோனா சூழலால் வெளியீட்டைத் தள்ளி வைத்தது படக்குழு. ஆனால், தற்போது தமிழக...
24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி விஷால் – நடிகர் மாரிமுத்து

24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி விஷால் – நடிகர் மாரிமுத்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      'வீரமே வாகை சூடும்' இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும...