சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: KAMAL HASSAN

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்!

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்!

Uncategorized
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்! பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கமல் தற்போது லோகேஷ் கன...
விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்....
இந்தியன்-2 பட விவகாரம்… தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு!

இந்தியன்-2 பட விவகாரம்… தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன்-2 பட விவகாரம்... தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு...
பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 எப்போது? தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது....
மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

HOME SLIDER, NEWS, politics
  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியில் துணைத் தலைவர் பதவி வகித்து வந்த மகேந்திரன் மற்றும் குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தோல்வியை தழுவினார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியில் பெரிய மாற்றம் செய்ய இருப்பதாகவும், அது கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், பொன்ராஜ், மவுரியா உள்ளிட்ட 10 நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் இந்நிலையில் மகேந்திரன் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், நான் கனத்த இதயத்துடனும், தெளிவா...
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு -கமல் தேர்தல் அறிக்கை

நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு -கமல் தேர்தல் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இருந்தது. முன்னதாக தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- 1. ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி கொடுக்கப்படும். 2. விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம். 3. 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக ...
மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் -மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 234 தொகுதியிலும் மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன். இதனால், பல இடங்களுக்கு செல்கிறேன். ஹெலிகாப்டருக்கான செலவு எனது தேர்தல் செலவின கணக்கில்தான் வரும். எங்களது கட்சி தேர்தல் அறிக்கை விரைவில் வரும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதை தற்போது கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இது போன்ற நல்ல விஷயம் மக்களுக்கு செல்ல முன்னோடியாக இருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற எங்களின் திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். "கமல்ஹாசன் அறிவித்த திட்டத்தை பலரும் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தி வருகிறார்கள்" என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் கூறி இருக்கிறார...