சமந்தாவை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா!
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு பதிலாக அக்கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
நடிகர் நாகசைதன்யா நடிக்கும் ...
‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை - மவுனம் கலைத்த சமந்தா!
நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இவர் தமிழ் ஈழ பயங்கரவாதியாக நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் இயக்குனர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை திரையிட்டு காண்பித்தனர். அதை பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன். அதில் எனக்கு ராஜி என்ற பயங்கரவாதி பெண் வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் ...
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது அமைதிக்கான காரணம் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்...
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? - இயக்குனர்கள் விளக்கம்!
சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இத்தொடரை இயக்கி உள்ளனர். இதில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ள இந்த தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் வற்புறுத்தப்பட்டு உள...
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் - வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களி...
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !
சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எட...
இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! - சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்திய பேட்டியில் கொரோனா குறித்து கூறியதாவது: “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும். கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள்.
அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது.
கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்...
சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?!
2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 ...
கவர்ச்சி உடையில் சமந்தா... வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது. அதன்படி நடிகைகள் ஹன்சிகா...