இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய்.
இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது.
அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தப்பை புரிய வைப்பது,
தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது
இவரைத் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சியை இவ...
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!
கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது,
இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் க...
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது.
நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொடர்...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன்.
அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும்.
எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் வேளாங்கண்ணியில் இன்று 3ம் நாள் பிரசாரத்தை துவக்கினார்.
காலை 9.30 மணிக்கு தனியார் ஓட்டலில் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல.
பழிபோடும் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் அரசியல்வாதி. மக்கள் நீதி மய்யம் மக்கள் மையமாக இருக்கும்.
இங்கு வந்துள்ள மகளிருக்கு பாதுகாப்பாக இருப்போம். பிற அரசியல்வாதிகள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வர சொல்லவில்லை.
இது தானாக வந்துள்ளது. இது கூட்டம் அல்ல, குடும்பம்.
ஓட்டு சேர்க்க உங்களிடம் நான் வரவில்லை. சேகரித்து கொடுங்கள் என கேட்டு வந்துள்ளேன்.
மகளிரிடம் ஏன் பேசுகிறேன் என்றால் ஆண்கள் செல்ல முடியாத இடத்திற்கெல்லா...