சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானா முன்னெச்சரிக்கை

என் வீடியோவை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்? – ரஜினி விளக்கம்

என் வீடியோவை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்? – ரஜினி விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று கொரோனா விழிப்புணர்வு குறித்தும், இன்று நடைபெறும் சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. ஆனால் இந்த வீடியோவை திடீரென டுவிட்டர்  நீக்கிவிட்டது. இந்த நிலையில் தன்னுடைய வீடியோவை டுவிட்டர்  நீக்கிய நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நேற்று பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று நான் கூறியிருந்தால், அது இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் டுவிட்டர் நிர்வாகம் அதை நீக்கி உள்...
கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி... மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது. கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமானம், ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில மாவட்ட எல்லைகளையும் தமிழக அரசு மூடி சீல்வைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த வாகனங்களும் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை. கடைகளிலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், பால் வினியோகம் மட்டுமே திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்க வேண்டாம் என்பதற்காக சமூக விலகலை அரசு கடுமையாக கடைபிடிக்க உத்தரவிட்...
கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க அனைத்து வழிகளிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்! அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது; கொரோனா நோய் பாதிப்பு அறிகுறியும் பருவகால புளு காய்ச்சல் தாக்குதல் அறிகுறியும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும், பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். இந்த நோய் ஒருவரிடத்தில் இருந்து ஒருவருக்கு பரவி விடக்கூடாது என்பது மிக முக்கிமானது ஆகும். எனவே அதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். 8 இடங்களில் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ...
தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு… மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு… மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு... மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு! இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது...
வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்… கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் – பிரதமர் மோடி

வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்… கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்... கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் - பிரதமர் மோடி உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் வாங்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கொரோனா வைரசின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தம் தரு...
மக்கள் ஊரடங்கு முடிவல்ல தொடக்கம்… ஆதரவளித்த மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

மக்கள் ஊரடங்கு முடிவல்ல தொடக்கம்… ஆதரவளித்த மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்கள் ஊரடங்கு முடிவல்ல தொடக்கம்... ஆதரவளித்த மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி மக்கள் ஊரடங்குக்கு நாட்டு மக்கள் அளித்த ஒத்துழைப்பால் பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி கிடந்த வீடியோக்களை தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டு சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தான் மதிப்புமிக்க வீரர்கள். உங்களின் எச்சரிக்கையும், உஷார் நிலையும்தான் லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்கும். இந்த ஊரடங்கு இரவு 9 மணியுடன் முடியலாம். ஆனால் இதை கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதை ஒரு வெற்றியாக கருதக்கூடாது. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கமாகவே கொள்ள வேண்டும். சமூக விலகலை உறுதி செய்வதற்கு இதுவே தகுந்த தருணம். மக்கள் ஊரடங்கால் மக்கள் தங்கள் குடும...
நாளை வழக்கம் போல மாநகர பஸ்கள் ஓடும் – தமிழக அரசு

நாளை வழக்கம் போல மாநகர பஸ்கள் ஓடும் – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாளை வழக்கம் போல மாநகர பஸ்கள் ஓடும் - தமிழக அரசு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை இன்று நள்ளிரவு முதல் வரும் 31ந்தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. எனினும், சரக்கு ரெயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என்றும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் வருகிற 31ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் நிறுத்தப்படுகிறது. இதேபோன்று தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வருகிற 31ந்தேதி வரை நிறுத்தப்படுகிறது. எனினும், தமிழகத்தில் நாளை காலை 5 மணி முதல் வழக்கம் போல மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது....
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைபடுத்த மத்திய அரசு பரிந்துரை… கொரானா முன்னெச்சரிக்கை!

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைபடுத்த மத்திய அரசு பரிந்துரை… கொரானா முன்னெச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைபடுத்த மத்திய அரசு பரிந்துரை... கொரானா முன்னெச்சரிக்கை! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதபடும் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைபடுத்தி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை மார்ச் 31 வரை தனிமைபடுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செயதாலும் தமிழக அரசு தான் இதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இம்மூன்று மாவட்டங்களிலும் காய்கறி, பலசரக்கு, பால், மருந்துக் கடைகள் தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் அடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது தனிமைபடுத்தப்பட்ட 3 மாவட்டங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். தேவை இல்லாமல் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்...
கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!

கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து! கொரானா பரவலை தடுக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும்  இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!

கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது! உலகம் முழுதும் கொரானா பீதியால் மக்களின் இயல்பான நடவடிக்கைகள் முடங்கிப் போய் உள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட எல்லா நிகழ்வுகளும் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறவுள்ளது இந் நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொட...