செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: கொரோனா தொற்று

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது...
இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் மீண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் செலுத்திகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து கடந்த 13-ந் தேதி 3,116 ஆக இருந்தது. மறுநாள் 2,500 ஆக குறைந்த நிலையில், நேற்று 2,568 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 938 ஆக உயர்ந்தது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. இந்நிலையில் அங்கு புதிய பாதிப்பு 1,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 98 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 72 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,072 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,884 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவ...
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வருகின்றனர். ஒமைக்ரான், கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ந்தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மார்ச் மாதத்து...
கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்தோறு...
மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி!

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி! தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகும் போலா சங்கர் என்ற படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்றிலிருந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக கடந்த நவம்பர் நவம்பர் மாதம் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது....
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்....
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது எப்.ஐ.ஆர், சேஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா வில்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ரைசா வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு 2-வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இரு...
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்....