48 மணிநேரம் தொடர்ந்து “அயோக்யா” ஷூட்டிங்கில் நடித்த விஷால்..!
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் -ல் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .
நடிகர் R.பார்த்திபன்,ராதாரவி,கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டத...









