சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரோனா வைரஸ்

உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை!

உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா இந்த புகாரை அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மத்திய உள்துறை மந்திரி 'அமித் அனில் சந்திர ஷா’வை காணவில்லை என்று டெல்லி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள புகாரில் நாகேஷ் கரியப்பா கூறுகையில், மக்களை கவனித்துக்கொள்ள அர...
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு!

கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு! இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதிநேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் வைரஸ் பாதிப்பு சற்றுதான் குறைந்து இருக்கிறது. கொரோனாவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 10 சதவீதம் ம...
செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!

செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்! ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி), ஆகியோருக்கு பாதிப்பு இருந்தது. அதோடு சி.எஸ்.கே. அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. இதனால் கிரிக்கெட...
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்! மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவின் நோய் ...
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு! கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 310 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 167 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 ...
6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு! கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை! தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “கரூர் தொகுதி ஓட்டுக்களை எண்ணும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து இருந்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை” என்று கூறி இருந்தார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்தது. கூடுதலாக 6 மேஜைகள் போடப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ...
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்று...
ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில மாநிலங்களில் படுக்கை தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்த அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. கொரோனா தொற்றை குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சிறப்பான வகையில் பயனளிக்கிறது. இதனால் உலகளவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது இந்தியாவில் அதிகமான தேவை இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும்வரை ரெம்டெசிவிர் ஊசி மரு...
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்! தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று விற்பனையாளர் சங்கம் அறிவித்து இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று காலையில் இருந்து சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று ஊழி...