ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Photos

ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'. வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்....
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ம...
அங்காடிதெரு மகேஷ் –  ஷாலு  நடிக்கும்  “ என் காதலி சீன் போடுறா “

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ... இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை  சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற ...
நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது. உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை, இது புரதத்துடன் இணைந்து ‘கொழுப்புப் புரதமாக‘ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகரித்தால் ஆபத்து காத்திருக்கும். கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும். இவற்றில், எல்.டி.எல்.லும், வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலில் இருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு‘ என்கிறோம். அதே வேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு ...
இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
  கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, க...
நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் – விஷால் ஆவேசம்

நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் – விஷால் ஆவேசம்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார். இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், ஓட்டலில் இருந்த அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக தமிழக அதிகாரிகள் குழு கேரளா விரைந்துள்ளதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத...
ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி

ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘செம’, ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் தயாராகிறது. இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். சோனியா அகர்வாலும் இந்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு நாயகியாக ‘சூதுகவ்வும்’, ‘பிட்சா 2’, ‘ரம்’ ஆகிய படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி இணைந்திருக்கிறார்....
நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு

நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார். இன்று காலை மகன்  தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியி...
1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் துவங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் சோதனை துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ...
டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார். டோஹாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளில் இந்திய இளம் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து 4-வது இடத்தை பெற்றார். நீரஜ் சோப்ரா, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 87.43 தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ஜேக்கப்பை பின்னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்தார். ஏற்கனவே நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 2016-ல் புதிய சாதனையோடு ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் டைமண்ட் லீக் போட்டியில் உலக சாம்பியன் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர், ஆண்ரிஸ் ஹாப்மேன் ஆகிய ஜா...