திங்கட்கிழமை, நவம்பர் 2
Shadow

Tag: மத்திய அரசு

முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி!

முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி! கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் விடப்பட்டது. அதில் வெளி மாநில மக்கள் அவர்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏதோ மத்திய அரசு இந்த சிறப்பு ரயில்களை இலவசமாக இயக்கியதாக பலரும் கூறிவந்தனர் ஆனால், பயணம் செய்த அனைவரிட்மும் பலமடங்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்தாததால் பல ரயில்கள் கட்டணம் வரும் வரை காத்திருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த அதிகமான ரயில் கட்டண வசூலை கண்டித்து பாஜக’வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை பட்டினி கொண்ட வெளி மாநில தொழிலாளர்களிடம்...
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரானா இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி முடிகிறது. அதே நேரம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பல மாநில முதல்வர்கள் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. சில மாநில முதல்வர்கள் அறிவித்து விட்டார்கள். இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்க...
கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ர...
கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை - ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் தற்போது உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, இந்தியாவிலும் 34 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுதும் படுவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு கூட்டம் நடத்தினார். மத்திய சுகாதாரத்துறை மந்...