செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: மத்திய அரசு

அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் மோடி உத்தரவு !

அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் மோடி உத்தரவு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய அரசின் அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்கிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது. இந்நிலையில், அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....
தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான  கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.  ...
பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்!

பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்!

Assembly news, NEWS, politics, செய்திகள்
பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - மத்திய அரசு வேண்டுகோள்! பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதையொடடி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார். இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் ஆளுங்கட்சியாக இருந்தாலும் , எதிர்க...
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்! ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி 3-...
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்! சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். மேலும் இந...
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிபான...
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்! நாடுமுழுவதும் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் 2-வது அலை பரவலை தடுத்து நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. 150 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்று கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியானது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்பு போல பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் மாநிலங்களுக்கு நேற்று இர...
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு!

கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு! நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடுகிறது. முதல்முறையாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3½ லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 66 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 35 ஆயிரத்து 311 பேரும், கர்நாடகாவில் 34 ஆயிரத்து 804 பேரும் ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 684 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர முழு ஊரட...
2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்! இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை  நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என்றும், இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாகவும் மத்திய அரசு கூற...
மீண்டும் தலை தூக்கும் 8 வழிச்சாலை… கோர்ட் தடையை ரத்து செய்ய மனு!

மீண்டும் தலை தூக்கும் 8 வழிச்சாலை… கோர்ட் தடையை ரத்து செய்ய மனு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் தலை தூக்கும் 8 வழிச்சாலை... கோர்ட் தடையை ரத்து செய்ய மனு! சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழகஅரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, நிலம் கையகப்படுத்தி இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மத்திய அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தரப்பிலும...