ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: Aiadmk

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம் – ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் விதி மீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பில்லாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்... ஆனால் மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் திமுகவின் அராஜகம் அத்துமீறலுக்கு மாநில தேர்தல் ஆணையம் துணைபோகிறது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.      ...
”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள். ‘நீட் தேர்வு ரத்து’ குறித்த அனைத்திந்திய அ.தி.மு.க. கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8-1-2022 அன்று நடைபெற்ற ...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு  அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை... ஆனால் சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வ...