சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: CONGRESS

ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை! உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் பெரும...
பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.!

பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிக்கு எதிராக காவித்துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவர்கள் அல்லாத பலபேர் மாணவியை விரட்டும் காட்சியை நாம் பார்த்தோம். இந்த காட்சி, இந்தியா முழுவதும் தீப்பிடித்ததுபோல பரவியுள்ளது. இது தமிழகத்துக்கு வந்துவிட ரொம்ப நாள் ஆகிவிடாது. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் வடமாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என்று பலபேர் என்னிடம் தெரிவித்து உள்ளனர். தென் மாநிலத்துக்கு தற்போது வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் இப்படி நடக்கவில்லை. ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு ஆளான பெண் போல, எல்லா பெண்களும் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் துணிவோடு எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதி...
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு! கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மோடி அரசு, பொருளாதாரத்தை மிக மோசமாக கையாளுகிறது. அதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய தார்மிக கடமை, காங்கிரசுக்கு இருக்கிறது. 70 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட சொத்துகள், மோடிஜியின் சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார்மயமாக்கத்துக்கு காங்கிரஸ் எதிரி அல்ல. ஆனால், காங்கிரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு ‘லாஜிக்’ இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களை காங்கிரஸ் அரசு தனியார்மயம் ஆக்கியது இல...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் இ...
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பல தொகுதிகளை இழந்த நிலையில் இந்த தேர்தலில் மீண்டு எழுந்தது. அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் 18 எம்.எல்.ஏ.க்களில் சட்டசபை தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறை எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள், இரண்டு மற்றும் 3 முறை எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடையே இந்த பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் எ...
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் காரணமாக அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட மாட்டாது. அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி மே 2-ந்தேதி எண்ணப்படும். அந்த தொகுதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான் அடுத்தகட்ட முடிவுகள் மேற் கொள்ளப்படும். மாதவராவ் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்....
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு! தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக. இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்க வேண்டாம் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக. அதிமுகவின் முகக் கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் பாஜகதான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. அமித்ஷா மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள், ஆனார் அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்திய...
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்! தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார். காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராகுல் அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி வருகிறார். வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளரும், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். ராகுல் பிரசார கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. சென்னை பிரசாரத்தை முடித்து கொண்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு ராகுல் செல்கிறார். அங்கு மதிய உணவை அருந்தி விட்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பிற்பகல் 2...