கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த புதிய அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது.
அவர்களைத்தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றார். அவர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி செல்கிறார். அவர், ந...
நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாவலர் என்று அன்போடு அழைக்கப்படும் இரா.நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 – சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க.அன்பழகன்.
கல...
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது,
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை
* வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
* 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற சட்டசபையில் தீர்மானம்...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்ற முதல் நாளே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மேலும், மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. காய்கறி, மளிகை கடைகள், பால் கடைகள் ஆகியன மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்ட...
ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.
இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.
ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.
தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார்...
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...