செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: Neet

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.   மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கி...
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் – திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் – திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கமிட்டனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை 2-வது திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை . 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வ...
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக...
நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு விவகாரம் - இன்று அனைத்துக் கட்சி கூட்டம்! மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதி அலுவலகம் சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்தனர். இதற்கிடையே, தமிழக சட்டசபையில் விரிவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மே...
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்!

நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்! அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கொரோனா 2-ம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்ததால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 10, 11 வகுப்பு தேர்வுகள் மற்றும் பருவ தேர்வுகளில் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். அதேநேரம் நீட் ஒரே ஒரு தேர்வுதான் என்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை பின்பற்றி தேர்வுகளை நடத்தலாம் என்றும் சிலர் வலியுறுத்தினர். இந்தச்சூழலில் கடந்த ஜூலை மாதம்  நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தே...
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- * 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. * கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும். * நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். * அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்....
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து! மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன. அதை கருத்தில்கொண்டும், கொரோனா  தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகளின...
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை! எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர்.  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த  ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. இந்த நிலையில்,  ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் (20). ஏற்கனவே 2 முறை  நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று 3-வது ...
‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி!

‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி! நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உண்டு. மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். அந்த தம்பதியின் மகளுக்கு 15 வயதே ஆன நிலையில், அவளை நீட் தேர்வுக்கு படிப்பதற்காக பயிற்சி மையத்தில் பதிவு செய்தனர். ஆனால் டாக்டருக்கு படிக்க தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து வந்தாள். இதை ஏற்காத பெற்றோர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெறும்படி சிறுமியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சிறுமி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அவளது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அங்கு சென்ற தாய், வீட்டுக்க...
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. கொரோனா முதல் அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது. இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில் கொரோனா 2-வது அலை தாக்க தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சுமார...