சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: pa.ranjith

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.* *-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.* இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பார...
ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகர்கள்
  #ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின், மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ' பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க , சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார். சிறந்த எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு . படம் விருவிருப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது. சிறந்த படத்தை தயாரிச்சிருக்கீங்க ரஞ்சித் என்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார். சூப்பர்ஸ்டார் ...
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

Uncategorized
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு! விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்! நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய் ப...
பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்!

பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்! இயக்குனர் பா.இரஞ்சித் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. அந்த வகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரைட்டர்’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்க...
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்! அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பா.இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த...
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள்
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புற...
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? - பா.ரஞ்சித் விளக்கம்! தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர் சி.யின் அரண்மனை ஆகிய படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பா.ரஞ்சித் இயக்கினார். குத்து சண்டையை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ...
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!

பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்! இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் ‘அட்டக்கத்தி’. இதில் கதாநாயகனாக தினேஷ் அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தினேஷை வைத்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தை பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படமும் கவனம் பெற்றது. இந்நிலையில் மீண்டும் தினேஷ் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது....
இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு…. பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் – நடிகர் நாசர் கடிதம்!

இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு…. பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் – நடிகர் நாசர் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு.... பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் - நடிகர் நாசர் கடிதம்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதை 1970-களில் வடசென்னை பகுதியில் நடத்தப்பட்ட பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை  ஆங்காங்கே இணைத்திருந்தனர். இதனால் இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாசர் பா.ரஞ்சித்தை பாராட்டி கடிதம் எழுதி உள்ளார். அதில், “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உங்கையைப் புடிச்சி ஒரு நூறு முத்த...