நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!
நான் நல்லவனா கெட்டவனா? - குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.
2012-இல் வெளியான ’நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்...







