செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

CINI NEWS

தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா!

தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலை இல்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரைசா வில்சனின் முகம் வீங்கி இருக்கிறது. புகைப்படத்தின் கீழ் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல் முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது. நான் தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன்...
கொரோனா 2-வது அலை எதிரொலி – சசிகுமார் படம் தள்ளிவைப்பு!

கொரோனா 2-வது அலை எதிரொலி – சசிகுமார் படம் தள்ளிவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கொரோனா 2-வது அலை எதிரொலி - சசிகுமார் படம் தள்ளிவைப்பு! கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்....
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெ...
மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் நடிக்க வந்த  மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்! லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் 2014-ம் ஆண்டு துபாயில் பணியாற்றும் அனில் ஜான் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அத்ன் பின்னர் ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மின் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. 2004-ம் ஆண்ட...
ஃபேசியல் செய்யப் போன இடத்தில் பிக்பாஸ் நடிகைக்கு நடந்த விபரீதம்!

ஃபேசியல் செய்யப் போன இடத்தில் பிக்பாஸ் நடிகைக்கு நடந்த விபரீதம்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
ஃபேசியல் செய்யப் போன இடத்தில் நடிகை ரைஸாவிற்கு நடந்த விபரீதம் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறவே அடுத்தடுத்து ரைஸா வில்சனுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. தற்போது தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரைஸா வில்சன். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றதாகவும் அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள ...
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் ‘மகள்’

தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் ‘மகள்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 'மகள்' பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக உப்பேனா தெலுங்கு படம் புகழ் க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தனுஷ். அது மாரி 3 படமா இல்லை புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி. உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்....
‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் – அமீர் கான் விலகியது ஏன்?

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் – அமீர் கான் விலகியது ஏன்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் - அமீர் கான் விலகியது ஏன்? மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். இருப்பினும் அமீர் கான் விலகியதற்கான காரணம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப்படத்தை பான் ஆசியா படமாக உருவாக்க நினைத்த அமீர் கான், இதன் கதையை அப்படியே ஹாங்காங் பின்னணியில் நடைபெறுவதாக மாற்ற சொன்னாராம். அதற்காக திரைக்கதையும் மாற்றி எழுதப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம், மற்றும் இந்தியா - சீனா ...
விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவமனை அறிக்கை!

விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவமனை அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவமனை அறிக்கை! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நடிகர் விவேக், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்...
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐ...
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....