சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

MOVIES

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது நியூட்டன்..!

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது நியூட்டன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் நியூட்டன் திரைப்படம், முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் 4ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவுக்காக, இந்தியா சார்பில் நியூட்டன் என்ற இந்தி திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முதல் சுற்றிலேயே வெளியேறியதாக, ஆஸ்கர் தேர்வுக்குழு தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வகை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஆஷுதோஷ் கோவாரிகரின் 'லகான்' 2001ல் இடம்பெற்றது. ஆனால், இதுவரை எந்த இந்திய திரைப்படமும் ஆஸ்கார் விருதை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
பூஜையுடன் தொடங்கப்பட்ட  ‘ஈடிலி’

பூஜையுடன் தொடங்கப்பட்ட ‘ஈடிலி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’. லிம்மல் ஜி,  லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று - இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். ...
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
500-வது படத்தில் அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி

500-வது படத்தில் அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். https://youtu.be/X40f8Lxc_0Q தயாரிப்பாளர் பேசிய போது, " பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேய...
அரசியல் ஆசை ? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

அரசியல் ஆசை ? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. சேவ் சக்தி அமைப்பு விஷயமாகதான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது ...
ஜெயம் ரவியின் அடங்க மறு படம்  பூஜையுடன் தொடங்கியது..!

ஜெயம் ரவியின் அடங்க மறு படம் பூஜையுடன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  உலக அளவில் மீடியா துறையில், சின்ன திரை தயாரிப்பிலிருந்து சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான 'ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ' தமிழ் சினிமா துறையில் கால் பாதிக்கவுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் தயாரிப்பிற்கு கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என இரு தரப்பட்ட படங்களிலும் கலக்கி உயர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்தை, சரண், மிஸ்கின் மற்றும் அமீருடன் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'அடங்க மறு ' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து, '' ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவே...
ஆணவக் கொலைகளையும்  அதிகார வர்கத்தையும்  அம்பலப்படுத்தும் “ களிறு “

ஆணவக் கொலைகளையும் அதிகார வர்கத்தையும் அம்பலப்படுத்தும் “ களிறு “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ களிறு “ இந்த படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரைசுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேஷன், காதல் அருண், ஜான், உமாரவி, உமா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். காதலிச்சாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டு இல்லையே கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மற்றப் படுகின்றன. அதன் பின்னணியில் இருபவர்கள் யார் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம் தான் “ களிறு ஆணவக் கொலைகள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன. ஆணவக் கொலை சம்மந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவோ எடு...
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி..!

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார். மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில்  உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த பட...
ஆர்.கே.நகரை தன் வசமாக்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்..!

ஆர்.கே.நகரை தன் வசமாக்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தன் வசமாக்கி இருக்கிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ...
தனுசுடன் மோதலா? சிவகார்த்திகேயன் விளக்கம்

தனுசுடன் மோதலா? சிவகார்த்திகேயன் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுசுடன் மோதலா? சிவகார்த்திகேயன் விளக்கம் எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன. அடுத்த வருடத்தில் இருந்து ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை. வியாபார ரீதியாக எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கான இடம் சினிமாவில் இருக்கிறது. அதை யாரும் பறிக்க முடியாது. தனுசுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. மக்களுக்கு என்ன செய்வார்கள் என்ற கொள்கையுடன் அவர்கள் வரவேண்டும். அப்படிப்பட்டவர்களை ம...