ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

செய்திகள்

தெற்கு ஆசிய ஜூனியர் தடகளத்தில் 7.74மீ நீளம் தாண்டி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றார் லோகேஷ்

தெற்கு ஆசிய ஜூனியர் தடகளத்தில் 7.74மீ நீளம் தாண்டி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றார் லோகேஷ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் நாளில் இந்தியா 11 தங்கப் பதக்கங்களை வென்றது. நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் எஸ். லோகேஷ் கலந்து கொண்டார். இவர் 7.7 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு தகுதியும் பெற்றார்....
நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, உதயசந்திரன் ஐஏஎஸ், ராஜகோபாலன், சா.மாடசாமி, பத்ரிகையாளர் சமஸ், கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, ‘கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம். 2006ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள், தன் தாய், தந்தை படிப்பறிவு இல்லாமல், படிக்க தேவையான புத்தகம், பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம். இது போல் படி படியாக பலவற்றை கூறலாம். பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம். எல்...
பாட புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்

பாட புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்

HOME SLIDER, NEWS, செய்திகள்
11-ம் வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில், "இசைத்தமிழர் இருவர்" என்ற தலைப்பில், இசையமைப்பாளர்கள்  இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நூல்களை கடந்த 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார். 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின. இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் 'இசைத் தமிழர் இருவர்' என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது. 'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில் திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளன....
ஆதார் பிரச்சினையை கிளப்பும் விஷால்

ஆதார் பிரச்சினையை கிளப்பும் விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. விஷால் நாயகனாக நடிக்கும் இதில், சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். லைகா நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த படத்தை கிரிஷ் சினிகிரியே‌ஷன் சார்பில் ஸ்ரீதரன் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்கிறார். “இந்த படத்தில் விஷால் ராணுவ மேஜராக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். சமந்தா டாக்டராக முக்கிய வேடத்தில் வருகிறார். அர்ஜுன் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இதில் ஆதார் அடையாள அட்டையால் ஒரு சாதாரண குடி மகனுக்கு என்ன என்ன பிரச்சினைகள் வருக...
நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு

நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார். இன்று காலை மகன்  தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியி...
1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் துவங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் சோதனை துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ...
ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னைக்கு உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ளது:- ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கட்சி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்த ராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய...
சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வருகிறதே ஏன்?

சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வருகிறதே ஏன்?

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசுப கிரஹங்களில் முதன்மையானது சனி என்பதால் இந்த பயம் வருகிறது. சனி என்றாலே தீய கோள், தீய பலனை மட்டுமே தரும் என்பது போன்ற கருத்து நிலவுகிறது. சோதனைகளை தந்து நமது முன்னேற்றத்திற்கு சனி தடையாக இருப்பார் என்று எண்ணுவதால் சனி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு, ஏன் காதால் கேட்பதற்குக் கூட அச்சம் கொள்கிறோம். உண்மையைச் சொன்னால் சனியின் மீதான இந்த பயம் அர்த்தமற்றது. சனி என்ற கோள் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ‘வேகத்தடை‘ போன்றது. வேகமாக சாலையில் பயணிக்கும் ஒருவருக்கு வேகத்தடையைக் கண்டதும் ஒருவித எரிச்சல் தோன்றும். நமது வேகத்தினை இது குறைத்து விட்டது என்று வருத்தம் கொள்வோம். ஆனால், நமது நலன் கருதியே அது அமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விபத்து ஏற்படாமல் நம் உயிரைக் காக்கும் உயரிய பணியை அந்த வேகத்தடை செய்கிறது. வேகத்தடையைக் கண்டதும் நிதானித்து சென்றோமேயானால் நமது ...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறதா திருப்பதி ஏழுமலையான் கோவில்?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறதா திருப்பதி ஏழுமலையான் கோவில்?

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான செயல் அலுவலருக்கு, மத்திய தொல்லியியல் துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். திருமலையில் உள்ள பழங்கால கட்டடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து,  மாற்றங்கள் செய்வதாக புகார் வந்துள்ளதாகவும்,  அந்த கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் வழங்கும் விலை மதிப்புமிக்க காணிக்கைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை என்றும்,  பழங்காலத்தில் மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என, மத்திய தொல்லியியல் துறைக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருமலை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோயில் கட்டடங்களின் விவரங்களை வழங்கும்படி, தொல்லியியல் துறை அதிகாரிகள் தேவஸ்தானத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து, கோவிலை மத்திய ...
டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார். டோஹாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளில் இந்திய இளம் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து 4-வது இடத்தை பெற்றார். நீரஜ் சோப்ரா, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 87.43 தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ஜேக்கப்பை பின்னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்தார். ஏற்கனவே நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 2016-ல் புதிய சாதனையோடு ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் டைமண்ட் லீக் போட்டியில் உலக சாம்பியன் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர், ஆண்ரிஸ் ஹாப்மேன் ஆகிய ஜா...