ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

NEWS

ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நிலவேம்பு கஷாயம் வழங்கும் விஷயத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு செய்தி அவருக்கு எதிராக திருப்பப்பட்டதால் மீண்டும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனா...
அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்

அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
🔥தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 இதே அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதயமாயிற்று. பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்...
கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!

கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் 'கர்ஜனை' காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.   உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை 'பருத்தி வீரன்' புகழ் கார்த்தி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார். https://youtu.be/dP0aIZcBRu0 இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. Motion Poster Link : https://www.youtube.com/watch?v=dP0aIZcBRu0  ...
இணையத்தில் திருட்டுத்தனமாக படம் ரிலீஸ் ஆவதை தடுத்தால் வரியை ஏற்கிறோம் அரசு உத்தரவாதம் தருமா – விஷால்

இணையத்தில் திருட்டுத்தனமாக படம் ரிலீஸ் ஆவதை தடுத்தால் வரியை ஏற்கிறோம் அரசு உத்தரவாதம் தருமா – விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
💰கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர் சந்திப்பு செய்தி 🎬அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல.திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா ?? அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த ...
புதிய ஆளுநர் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவார் என நம்புகிறேன்’ – மு.க.ஸ்டாலின் அறிக்கை

புதிய ஆளுநர் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவார் என நம்புகிறேன்’ – மு.க.ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், " அறிக்கையில், "தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, ...
ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ

ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  😍மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ உரையாற்றினார்.     வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார். வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர். வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையி...
படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு ப...
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை  – கருப்பன் விஜயசேதுபதி

நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை – கருப்பன் விஜயசேதுபதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை. நான் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை - கருப்பன் விஜயசேதுபதி   விஜயசேதுபதி நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பத்திரிகை சந்திப்பில் விஜய சேதுபதி பேசியதாவது: கருப்பன் படம் முன்னாடியே முடிவு செய்த படம். நாங்க ஷூட்டிங்ல இருக்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சி. அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். நான் யாருக்கும் போட்டி எல்லாம் இல்லீங்க. இங்க நீளம், உயரம் எல்லாம் இல்ல சினிமா ஒரு வட்டம் மாதிரி யார் மேலே யார் கீழே அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நண்பர்கள் கேட்டுகிட்டதால கெஸ்ட் ரோல் தவிர்க்க முடியல. விஜய சேதுபதி ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லீங்க. இது என்னோட ஊர். எந்த படமும் நடிகனுக்காக ஓடுறதே இல்லை. நடிகன புடிச்சா முதல் 2 நாள் வருவாங்க. ...
த்ரில்லர்  படத்தில் நயன்தாரா…!

த்ரில்லர் படத்தில் நயன்தாரா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும்  உச்சியில் இருக்கும்  ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால்  அது எவ்வளவு சுவாரஸ்யமாக  இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ''குற்றம் 23' படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை  வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ''ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள  நட்சத்திரம் நடிக்க இருப்பதில்  எனக்கு பெரும் மகிழ்ச்சி.  அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும்.  படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ...
அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு

அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் என்றால் அது பாடம்.இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையாமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக தான் இந்த பாடம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர்,நகைசுவை நடிகை மதுமிதா, யாசிகா,கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ. படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார், இந்த படத்தை ஜிபின்.P.S தயாரித்துள்ளார் . பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையராங்கில் மிக விமர்சியாக நடந்தது இதில் முக்கிய விருந்த...