வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

செய்திகள்

சூர்யாவிடம் கதை சொல்லனுமா… அப்ப குறும்படம் எடுங்க… பரிசும் உண்டு வாய்ப்பும் உண்டு..!

சூர்யாவிடம் கதை சொல்லனுமா… அப்ப குறும்படம் எடுங்க… பரிசும் உண்டு வாய்ப்பும் உண்டு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோலாகலமாகத் தொடங்கிய ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2    "குறும் படங்களை பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது" இயக்குநர் ராம்   மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில்,‘ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி...
தீபிகாவை உயிரோடு புதைப்போம் – ராஜ்புத் அமைப்பு பகிரங்க கொலை மிரட்டல்

தீபிகாவை உயிரோடு புதைப்போம் – ராஜ்புத் அமைப்பு பகிரங்க கொலை மிரட்டல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் திரைப்படம் வெளியானால், தீபிகா படுகோனே-வை உயிரோடு புதைப்போம் என்று ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் என்பவர் பகிரங்க கொலைமிரட்டல் விடுத்துள்ளார். சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் பத்மாவத். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்துத்துவா அமைப்புக்களும், ராஜபுத்திர சாதியவாத அமைப்புக்களும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீதிமன்றம் மூலம் படத்திற்கு தடை வாங்கவும் அந்த அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டன. அது பலிக்கவில்லை. இந்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில், நாடு முழுவதும் ‘பத்மாவத்’ படத்தை வெளியிடுவதற்கு ...
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் முதல் போராட்ட அறிவிப்பு… அரசியல் போராட்ட ஆரம்பமே உண்ணாவிரத்த்தில் தொடங்குகிறது..!

பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் முதல் போராட்ட அறிவிப்பு… அரசியல் போராட்ட ஆரம்பமே உண்ணாவிரத்த்தில் தொடங்குகிறது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரப்போவதாக அறிவித்துள்ளது. பட்டாசு தொழிலுக்கு ஆதரவு கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். களத்தில் சிஐடியு தீவிரமாக நிற்கிறது. நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இதுமட்டுமின்றி ரூ.350 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். வேலையில்லாமல் அன்றாட செலவைக் கூட சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று அவர்களது போராட்டம் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் கந்தக பூமியான சிவகாசியில் போராடும் பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கமல்ஹாசன்...
150 ஆண்டுக்குப்பின் நீல நிற சந்திர கிரகணம்;ஜனவரி 31-இல் பார்க்கலாம்…!

150 ஆண்டுக்குப்பின் நீல நிற சந்திர கிரகணம்;ஜனவரி 31-இல் பார்க்கலாம்…!

HOME SLIDER, NEWS, செய்திகள்
150 ஆண்டுகளுக்குப் பிறகு- அரிதான முழு சந்திர கிரகணம், ஜனவரி 31-ஆம் தேதி ஏற்படுகிறது. ‘நீல நிலா’ என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரகணத்தை, வெறும் கண்களால் காணலாம். 2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு (super blue blood) நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி முதல் தேதியில் ஒன்றும், ஜனவரி 31-ஆம் தேதி மற்றொன்றுமாக சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்ற உள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31-ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது. இது போல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக மார்ச் 31, 1866-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.2018-ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. ஜனவரி 31-ஆம் தே...
சூர்யா பற்றிய நக்கல் நையாண்டிக்கு நடவடிக்கை தேவை… டிவி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

சூர்யா பற்றிய நக்கல் நையாண்டிக்கு நடவடிக்கை தேவை… டிவி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்நில...
பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?

பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இம்மாதம் 25 ஆம் தேதி, பத்மாவதி திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் தணிக்கை துறை சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர் இப்படகுழுவினர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர். அந்த தீர்ப்பில்,"மாநிலங்கள் படத்திற்கு தடை விதிப்பது, கூட்டாட்சியை ஒழிப்பதற்கு ஒப்பானது. இது ஒரு முக்கியமான விஷயம். யாருக்காவது ஏதேனும் பிரச்னை என்றால், நிவாரணத்திற்காக அதற்கான உரிய தீர்ப்பாயத்தை அணுகலாம். மாநிலங்கள் ஒரு படத்தின் உள...
மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்

மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் `இரும்புத்திரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஷால், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், யுவன் ஷங்கர் ராஜா, குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி, விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா துவங்கியதும் கிட்னி செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி நன்கொடை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார். விஷால் பேசிய போது, சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். ...
பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!

பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை வகிக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் இந்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு செலவினங்களை சமாளிக்க அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்கும் முடிவுக்கு பிரதிநிதிகள் சபையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், 100 உறுப்பினர்களை கொண்ட சென...
‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’   எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா 2ஜி விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில், 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி ஃபரூக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை ஃபரூக் அப்துல்லா வெளியிட ஆ.ராசா பெற்றுக் கொண்டார். ஹர் ஆனந்த் பதிப்பகம் சார்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்ட...
நடிகர் செளந்தரராஜா தமன்னாவை கரம் பிடிக்கிறார்… இன்று திடீர் நிச்சயதார்த்தம்..!

நடிகர் செளந்தரராஜா தமன்னாவை கரம் பிடிக்கிறார்… இன்று திடீர் நிச்சயதார்த்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. ...