வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

sports

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது : ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் கடந்த காலங்களில் தோனி அணியின் மன உறுதியை உயர்த்த உதவியுள்ளார். அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நிலையான அணியாக மாற்றினார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அ...
ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி வரும் 25ம் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி...
2வது ஒருநாள் போட்டி : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்!

2வது ஒருநாள் போட்டி : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 43 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. அடுத்து இறங்கிய கே எல் ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்னில் அவுட்டானார். வாஷிங்...
செனகல் நாட்டில் வெற்றி கொண்டாட்டம் – தேசிய விடுமுறையை அறிவித்தார் அதிபர்!

செனகல் நாட்டில் வெற்றி கொண்டாட்டம் – தேசிய விடுமுறையை அறிவித்தார் அதிபர்!

HOME SLIDER, sports, உலக செய்திகள், செய்திகள்
33-வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில் 90 நிமிடங்கள் நடைபெற்ற முழு ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிட  நேரத்திலும் இருஅணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து  வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடரில் 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி 2022ம் ஆண்டுக்கான போட்டியில்  முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஆப்பிரிக்க கால்பந்து கோப்பையை சென...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும்-தினேஷ் கார்த்திக்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும்-தினேஷ் கார்த்திக்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12, 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் பவுலர்கள், சிறந்த ஆல் ரவுண்டர்கள், இளம் வீரர்கள் என பலர் தங்கள் பெயரை பதிவுசெய்துள்ளனர். இதற்கிடையே, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்தவன் நான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்....
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஐ.சி.சி. உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1000 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ...
குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

HOME SLIDER, sports, உலக செய்திகள், விளையாட்டு செய்திகள்
  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடக்கும் இந்த போட்டியில் முதலாவது தங்கப்பதக்தக்தை நார்வே தட்டிச் சென்றது. பெண்களுக்கான 15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் (காலில் சக்கர பலகை கட்டிக்கொண்டு ஐஸ்கட்டி பாதையில் சறுக்கியும், கம்பு ஊன்றியும் ஓடுவது) நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரஷிய வீராங்கனை நதாலியா நேப்ரியேவா வெள்ளிப்பதக்கம் பெற்றார். 33 வயதான ஜோஹாக் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 1½ ஆண்டு கால தடை காரணமாக 2018-ம்ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. ...
19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

19 வயது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 5வது முறையாக சாம்பியன்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  19 வயது உலக கிரிக்கெட் கோப்பையில் இந்தியா சாம்பியன்! இறுதிப்போட்டியில் இங்கிலாந்து எதிரான 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய U19 அணி. 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது   19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த...
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் : சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் : சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய ஜேம்ஸ் ரிவ் சிறப்பாக விளையாடி 116 பந்தில் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் ராஜ் பவா சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 9 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுதது 4 விக்கெட் கைப்பற்றினார். பின...
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது. விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது. ...