புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

Tag: CM MK Stalin

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நோய் தொற்று சற்று தணிந்ததால் ஜூன் 7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 தடவை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தளர்வுகள் அறிவிப்பதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மேலும் புதிய தளர்வுகளை அறிவிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதன்படி புதிய தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிய...
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிற...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்திற்கான  கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலங்களுக்கு நிலுவை தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும்....
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து! இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவ...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக...
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். 3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச...
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி! தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். ‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வி...
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கொர...
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்....
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, * டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.00 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. * தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். * கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும். * குறுவை நெல் சாகுபடிக்காக இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும். * 2,870 மெ.டன் சான்று நெல் விதைகள் 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் மானிய விலையில் தரப்படும். * 1.90 லட்சம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள் என இடுபொருட்களுக்கு ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்படும். * வேளாண் ...