Tag: dmk
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – ஸ்டாலின்
இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரியலூர் அனிதா தொடங்கி மதுரை ஜோதிஸ்ரீ துர்கா வரையிலான தற்கொலைகள் பரிதவிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார். இரண்டு அரசாங்கங்களாலும் வளர்க்கப்பட்ட இந்த நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும், அவர்கள் மருத்துவம் படிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும் கூறியுள்ளார். அதற்காக எந்தவிதமான சட்டப்போராட்டத்தையும், ஆட்சிப் போராட்டத்தையும் திமுக...
வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி புதிய கட்சியால் பாமக ராமதாஸ் ஷாக்
https://youtu.be/QWFw0A-EaAI
இந்தி தெரியாது போடா வாசகம் உள்ள டி சர்ட்டுக்கு அதிகரிக்கும் ஆர்டர்கள்!
திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் விஷயங்கள் மற்றும் சம்பவங்கள், காட்சிகள் போன்றவற்றை இந்த இளம் வயதினர் எடுத்துரைக்கும் வகையில் டி-சர்ட்டுகளை தயார் செய்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் வடிவேலுவின் பிரண்ட்ஸ் திரைப்பட கதாபாத்திரமான நேசமணி என்ற பெயரை பயன்படுத்தி டி-சர்ட்டுகளை தயார் செய்தனர். இந்த டி-சர்ட்டுகளுக்கு வெளிநாடுகள் வரை அதிக வரவேற்பு கிடைத்தது. இதன் விற்பனையும் அதிகரித்தது. இவ்வாறாக சமூக வலைதளங்களில் காமெடியாக இருப்பதும், சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் சம்பவங்களை மையப்...
துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திமுக எம்.எல்.ஏ. புழல் சிறையில் அடைப்பு!
துப்பாக்கி சூடு விவகாரத்தில கைது செய்யப்பட்ட திமுக எம் எல்.ஏவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர்,திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக இன்று இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த சண்டையில் இமயம் குமாருடன் வந்த கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் க...
நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு!
நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுட...
சொத்து வரியை செலுத்த 6 மாதம் கால அவகாசம் தர வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
சொத்து வரியை செலுத்த 6 மாதம் கால அவகாசம் தர வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீடிக்கின்ற நிலையில், “நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும்” என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.
கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். தங்கள் வாழ்க்கையை இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே சென்னை மாநகராட்சி இந்த வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் 6 மாதத்திற்க...
கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதை மறைக்கும் எடப்பாடிபழனிச்சாமி வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரானாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.
நாட்டிலேயே கொரானா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரானா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது.
கொரானா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரானாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதி...
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி!
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி!
கொரானா கொடுமையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட மக்களுக்கு திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார்.
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி அப்பா ஸ்டாலின் வழியை பின் தொடர்ந்தார்.
கொரானா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்து அதனை செம்மையாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
இ...


