புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கா...
துப்பாக்கி  கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இனி நட...
மர்மமான பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை!

மர்மமான பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது.  கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் (யூ.எஃப்.ஓ) தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது. இந்தியானா மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கார்சன் கூறுகையில், ‘50 ஆண்டுகளுக்கு பிறகு பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நடைபெறவுள்ளது. புலனாய்வுத்துறைக்கு கீழ் நடைபெறும் இந்த வழக்கில், பறக்கும் தட்டுக்களால் நமது தேசத்திற்கு ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கு நடைபெறவுள்ளது. விளக்கம...
அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- 12 பேர் காயம்!

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- 12 பேர் காயம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர்  ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வணிக வளாக உணவு அறையில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், மக்கள் அங்கிருந்து ஓடுவதை பார்த்ததாகவும் டேனியல் ஜ...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளதாவது: ரஷ்யா உக்ரைனை எந்த நாளும் ஆக்கிரமிக்கக் கூடும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிர் இழப்பு ஏற்படும். ஆனால் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் பதிலின் அடிப்படையில், ரஷ்யாவிற்கும் அதிக ராணுவ இழப்பு ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைன் தலைநகர் கெய்வை விரைவாகக் கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயலும் போது 50,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்....
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு! அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது. சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட ச...
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா!

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா! கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அந்த வகையில் ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேப்பாள், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ள...
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர்  அணிய தேவையில்லை! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்..* *ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார்..* *அப்போது பேசிய அவர், “ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது..* *அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். ஈரானின் செயல்களை சகிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவி...
உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின்  இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின் இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்.... 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்... _"சுலைமானியின்.._" ... இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி… உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி … இறுதிச்சடங்கு - வீடியோ டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகி...