புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஆர் கே சுரேஷ்

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’!

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி ஆர். கே. சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடியோ 9 ...
விசித்திரன் – விமர்சனம் 3.75/5

விசித்திரன் – விமர்சனம் 3.75/5

CINI NEWS, HOME SLIDER, REVIEWS
காவல்துறையில் பணிபுரிந்து வந்த ஆர் கே சுரேஷ், மகள் இறந்த துக்கம் தாளாமல் VRS வாங்கிக் கொண்டு தனிமையில் நாட்களை நகர்த்துகிறார். மனக்கசப்பு காரணமாக வேறொரு திருமணம் செய்து கொண்ட மனைவி பூர்ணாவையும் அவ்வப்போது நினைத்து நினைத்து கண்கலங்கி மது, புகை என தன்னைத் தானே மனதையும் உடலையும் வருத்திக் கொள்கிறார். இவர் வி ஆர் எஸ் வாங்கிச் சென்றாலும், முடிக்க முடியா பல வழக்குகளை முடித்துத் தருமாறு காவல்துறையே இவரிடம் வந்து நிற்கும், அந்த அளவிற்கு திறமையானவர். ஒருநாள், பூர்ணா விபத்தில் சிக்கி இறந்து விட, அது விபத்து அல்ல, கொலை என கண்டறிகிறார் ஆர் கே சுரேஷ். யார் அந்த கொலை செய்தது.? கொலைக்கான காரணம் என்ன.? இதில் மருத்துவமனையில் நடக்கும் ஊழல் என்னென்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் “விசித்திரன்”. மாயன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆர் கே சுரேஷ். இப்ப...
ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்” புது பட அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா!

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்” புது பட அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  பொங்கல் திருநாளில் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் 'ஒயிட் ரோஸ் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா! தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே. சுரேஷ் தற்போது ' ஒயிட் ரோஸ்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் அறிவிப்பு பொங்கல் திருநாளான இன்று வெளியானது. இதில் இன்னொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். இதில் நாயகியாக கயல்' ஆனந்தி நடிக்கிறார். இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோ வின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர். மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான ...
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்! மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்...
போலீஸ் அதிகாரியாக ஆர் கே சுரேஷ் நடிக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’!

போலீஸ் அதிகாரியாக ஆர் கே சுரேஷ் நடிக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’!

CINI NEWS, NEWS, செய்திகள்
வில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03.'. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் . அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது . இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70% தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன. ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள், அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா. தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகி...