புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: இத்தாலி

இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி - இத்தாலியில் முன்னேற்றம் உலகம் முழுதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. பல நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், உலகின் முதல் கொரானா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ள...
வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகையே பயங்கர பீதிக்குள்ளாக்கியுள்ள கொரானா வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாடிகன் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. ...