செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைனின் பக்முத் நகரை  கைப்பற்றிய ரஷியா!

உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றிய ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது. பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷியாவின் வாக...
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும்...
அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்....
அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது!

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
  உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே,  கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. இதனை கவர்னர் மக்சிம் மார்சசென்கோவும் உறுதியளித்தார். ஆனால் ரஷியா இதற்கு மறுப்ப தெரிவித்தது. இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் மூழ்கியது என்றும் வெற்றகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கப்பலில் வெடிமருந்து வெடித்ததால்தான் தீப்பிடித்தது என்றும், அதன் ...
உக்ரைன் போர் 26-வது நாள்: உக்ரைனில் இருந்து 4-ல் ஒரு பங்கு மக்கள் வெளியேற்றம்!

உக்ரைன் போர் 26-வது நாள்: உக்ரைனில் இருந்து 4-ல் ஒரு பங்கு மக்கள் வெளியேற்றம்!

HOME SLIDER, NEWS, ukrain war, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
  சுமி நகரில் உள்ள சுமிகிம்ப்ரோம் ரசாயன ஆலையில் இருந்து அமோனியம் கியாஸ் கசிவதாக அந்நகர கவர்னர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷியாவின் எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது. உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை இன்று பேரலுக்கு 2 டாலர் உயர்ந்துள்ளது. சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தின்படி கச்சா எண்ணெய் தயாரிக்க முடியாததால் விலை உயர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மரியுபோல் நகரில் ரஷியா-உக்ரைன் படையினர் இடையே தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மக்கள் உணவு, தண்ணீரின்றி அவதியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான இரு தரப்பு பேச்சுவ...
21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன்  மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் இன்று 21-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றியுள்ள எல்லைகளில் இருந்து ரஷிய படைகள் அந்நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளை அழிக்க ஏவுகணைகள் வீசப்பட்டன. பின்னர் முக்கிய அணு உலை நிலையங்களை ரஷிய படையினர் கைப்பற்றினர். தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறத...
உக்ரைன் போர்களத்தில் செய்தியாளர்,கேமராமேன் பலி!

உக்ரைன் போர்களத்தில் செய்தியாளர்,கேமராமேன் பலி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 20வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில்  தனியார் செய்தி நிறுவனத்தின்  பெண் செய்தியாளர் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உயிரிழந்துள்ளனர். போர் செய்தி சேகரிப்புக்காக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களது வாகனம்  போர் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த  இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற நிருபர் உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதனிடையே, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப்பட்டத...
உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருகிறது – நேட்டோ கூட்டமைப்பு தகவல்!

உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருகிறது – நேட்டோ கூட்டமைப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு குறித்து விவாதிக்க பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருவதாக தெரிவித்தார். இதனால் நேட்டோ உறுப்பு நாடுகள் கவலை அடைந்துள்ளதாக அவர் கூறினார். உக்ரைனில் உயிரி ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக ரஷியா தவறான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதை காரணம் காட்டி ரஷியா ரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும், நேட்டோ இது குறித்து மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யா அத்தகைய சர்வதேச சட்டத்தை மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். எனினும், ரஷியா உக்ரைனி...
போரை நிறுத்த அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்-உக்ரைன் அதிபர் நிபந்தனை!

போரை நிறுத்த அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்-உக்ரைன் அதிபர் நிபந்தனை!

HOME SLIDER, NEWS, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதி...