என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு”. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்தது.
இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மிக வேகமாக இருப்பதாலும், சமீபத்தில் பிரசாரம் செய்த இடத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் பார்திபனின் ஒத்த செருப்பு படவிழாவில் கண்டிப்பாக கமல்ஹாசன் செருப்பு வீச்சுக்கு பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசனும் தனது கலகல பேச்சில் பூர்த்தி செய்தார்.
கமல் பேசியதாவது:
” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவ...

