புதன்கிழமை, மே 15
Shadow

என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

 

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு”. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்தது.

இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மிக வேகமாக இருப்பதாலும், சமீபத்தில் பிரசாரம் செய்த இடத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் பார்திபனின் ஒத்த செருப்பு படவிழாவில் கண்டிப்பாக கமல்ஹாசன் செருப்பு வீச்சுக்கு பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசனும் தனது கலகல பேச்சில் பூர்த்தி செய்தார்.

கமல் பேசியதாவது:

” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார்.

ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நான் காந்தியின் ரசிகன்.

நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

தற்போது ஒரு செருப்பு கிடைத்துவிட்டது. மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும்.
அதற்கான தகுதி எனக்கு உண்டு.

செருப்பை போட்டவருக்கு தான் அவமானம்”. என்றார்.

516 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன