சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார். இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலித்...
எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றிய பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் ஓ.பன்னீர...
ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி 48 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுநாளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போல...
ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார். அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும். தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன. நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகி...
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். ...
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது! தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்....
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது! தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி,   ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே  அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று  தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி...
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப...
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மனுக்கள் உட்படத் தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை தொகுதிகள் தோறும் இன்று நடைபெற்றது. வேட்பு மனுக்களில் அனைத்து விவரங்களும் உள்ளனவா? முறையாகச் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளனவா? என்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலித்தனர். அனைத்து விவரங்களும் முறையாக...
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்  பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக...