சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு!
ஒற்றுமையாக இருப்போம்... டிஜிட்டல் ரிலீசால் திரையுலகம் அழியாது... தயாரிப்பாளர் தாணு திடீர் வீடியோ!
டிஜிட்டலில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சூர்யா எடுத்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழ் திரையுலகில் பிரமாண்ட தயாரிப்பாளரான தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருக்கும் முக்கிய தகவல்:
பொன்மகள் வந்தாள் படம் மார்ச்சில் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரானா இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி தானாகவே டிஜிட்டலில் படம் வந்திருக்கும். இப்போது கொரானாவால் தியேட்டர்கள் இல்லாமல் அந்த வருமானம் இழந்திருக்கிறார்கள்.
அதோடு டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும்.
சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொக...
