வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

Tag: திருமணம்

நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்துகள்!

நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்துகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹ...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்....
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி? தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற (25-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும். இந்த பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்த திருமணங்களையும் நிறுத்தவேண்டியது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்த...
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஜோத்பூரில் உ...