புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: முக.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்! 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை * வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். * 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற சட்டசபையில் தீர்மானம்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை! கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தள...
புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன்பிறகு எதிர்க்கட்ச...
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி! தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...
துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துரைமுருகனின் "ஜாதி" பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்..! தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதன் காரணமாக நடக்க உள்ள 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பே ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் தொடங்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி தேர்தலுக்கு தயார் ஆனது திமுக. அதே நேரம் 1951ம் ஆண்டில் இருந்து கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியை எந்த கட்சி வெற்றி பெருகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு. திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் தொகுதியை தவறான வேட்பாளர் தேர்வால் அதிமுகவிடம் தொடர்ந்து 2 முறை இழந்து நிற்கிறது திமுக. இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் பனப்பாக்கம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது " அரக்கோணம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு ...
பாஜக கொள்கையை எதிர்த்த முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

பாஜக கொள்கையை எதிர்த்த முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்டாலின் மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே கல்வி உரிமையை பறிப்பது என கடிதம் எழுதினோம். எதிர்க்கட்சிகளின் கடிதத்தின் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது....
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி கொடுங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி கொடுங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி கொடுங்கள் - முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் இப்போது நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரானா நோய்த் தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயர மளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை எதிர்கொள்ளத் தேவை...
திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி! கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வருகிற 8ந்தேதி புதன்கிழமை காலையில் நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் புதன்கிழமை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள அசாதாரணமான சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை கேட்கவும் திட்டம். இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசியில் பேசி உட...