ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14
Shadow

Tag: ரஜினி

ரசிகர்களை கவர்ந்த ‘இது டைகரின் கட்டளை’ பாடல் – ஜெயிலர்!

ரசிகர்களை கவர்ந்த ‘இது டைகரின் கட்டளை’ பாடல் – ஜெயிலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர...
எனது நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!

எனது நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவருடைய 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' சார்பில் தற்போது கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16' படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அவருடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும...
ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த புதிய தகவல்!

ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி சம்...
ஜெயிலர் படத்தில் மோகன்லால்… படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்!

ஜெயிலர் படத்தில் மோகன்லால்… படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ...
ஜெயிலர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாரான ரஜினி !

ஜெயிலர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாரான ரஜினி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத...
லீக் ஆன ஜெயிலர் படப்பிடிப்பு வீடியோ காட்சி!

லீக் ஆன ஜெயிலர் படப்பிடிப்பு வீடியோ காட்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முன்னணி கதாநாயகர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடிக்கும்போது அதை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தும், வீடியோவில் பதிவு செய்தும் இணையதளத்தில் கசியவிடுவது தொடர்ந்து நடக்கிறது. வாரிசு படப்பிடிப்பில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதனால் படப்பிடிப்பை பாதுகாப்போடு நடத்துகிறார்கள். இந்நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு வீடியோவும் இணையத்தில் கசிந்துள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பை சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கினர். பின்னர் எண்ணூரில் நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் நடித்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புதியதாக ஒரு வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கு...
நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த சூட்டோடு சூடாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி "பளீர்" என கூறியதும் விவாதமாகி இருக்கிறது. உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. பிரதமர் மோடி, ரஜினியை விரு...
“ஜெயிலர்” என்ற பெயரை அறிவித்த தலைவர் 169 படக்குழு!

“ஜெயிலர்” என்ற பெயரை அறிவித்த தலைவர் 169 படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினி

இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். ‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இ...
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....