சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: வலிமை

வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது!

வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சமயத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்திருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக...
ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள். இந்நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நாளை (24.02.2022) வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததை குறித்து நடிகை ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான ஒரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர...
அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!! அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக இருந்து வந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வலிமை அப்டேட் கேட்டு பேனர் பிடித்த வெறித்தனமான ரசிகர்களுக்கு விருந்தளிக்க வலிமை பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகும் என அறிவிகப்பட்டது. உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பட ரிலீசை எதிர் நோக்கி இருந்தனர். இந்த சூழலில் வைரஸ் பாதிப்பும், ஒமைக்ரான் பரவலும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாவதால் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. முதற்கட்டமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவு நேர ஊரடங்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட தட...
மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்! அஜித்தின் மிரட்டலான  நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலிமை அப்டேட் என்ற வார்த்தை கூட டிரண்டிங்கில் இருந்தது. இந்த சூழலில் வலிமை டீசர் வெளியாகி பெரும் வர்வேற்ப்பை பெற்றது. யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் பொங்கல் ரிலீசாக வலிமை வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதோடு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆவதால் இன்னும் சந்தோ...
வலிமை டிரைலர் படைத்த சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

வலிமை டிரைலர் படைத்த சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை டிரைலர் படைத்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். வெளியான சில மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்தது. தற்போது வரைக்கும் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....
வலிமை படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ!

வலிமை படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ! வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/n2HiLyWHrWc  ...
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு! நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், வினய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இதில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு மாபெரும் வரவேற்பையும் பெற்றது. அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் பட...
‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமட...
நாங்க வேற மாரி – வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நாங்க வேற மாரி – வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதற்கிடையே, இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாடலான,  ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்....