புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார். இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்....
கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்!

கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார். ‘செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் வருகிற ஜூன் 13ஆம் தேதி அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார். செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....