ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: அனிருத்

’ஜெயிலர்’- படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

’ஜெயிலர்’- படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sun...
விக்ரம் படத்திற்காக அனிருத்துக்கு கமல் அளித்த பரிசு!

விக்ரம் படத்திற்காக அனிருத்துக்கு கமல் அளித்த பரிசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார். இதையடுத்து 'விக்ரம்' படம் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நிருபர் ஒருவர் கமல் சார், லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு வாட்ச்சும் பரிசளித்தார் உங்களுக்கு என்ன கொடு...
ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, பால சரவணன், சிவாங்கி உள்ளிட்ட நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 'டான்' திரைப்படம் இன்று (13.05.2022) அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர். இப்படத்தை படக்குழு ரசிகர்களுடன் திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர். அதன்படி நடிகர்...
ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து குரல் கொடுக்கும் சிம்பு, அனிருத்!

ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து குரல் கொடுக்கும் சிம்பு, அனிருத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார். அந்த படத்தில், “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழு...
தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://youtu.be/-aVdxDDrcTc...
பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் போன்ற படங்கள் உள்ளன. இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் தனுஷின் ராஞ்சனா, அத்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது....
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்! சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்...
சியான் 60 படத்தில் அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் !

சியான் 60 படத்தில் அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சியான் 60 படத்தில் அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் ! ‘கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், தற்போது ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், அவர் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால், அவரால் ‘சியான்-60’ படத்தில் பணிபுரிய முடியவில்லையாம். அதனால்...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீ...
கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளியான “விக்ரம்” படத்தின் டைட்டில் டீசர்.!

கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளியான “விக்ரம்” படத்தின் டைட்டில் டீசர்.!

Uncategorized
கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளியான "விக்ரம்" படத்தின் டைட்டில் டீசர்.! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  "கமல்ஹாசன் 232"  படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது "விக்ரம்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் கமல் அவர்களின் கதாபாத்திரம் பயங்கரமாக உள்ளது . தற்போது அந்த படத்தின் டைட்டில் டீசர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.மேலும் இந்த படத்தில்...