திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள...
மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்! 20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ் தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம் நேர்ந்திருக்கிறது. துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆப்கானிஸ்தானியர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் மூட்டை, முடிச்சுகளோடு, பிள்ளை குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானிய மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கே போவது, எப்படி போவது, எதில் போவது என எதிலும் திட்டமிடப்படாத கண்ணீர் வாழ்க்கை, அவர...
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிப...
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்! ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப...