வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: டோக்கியோ ஒலிம்பிக் 2021

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்!

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்துள்ளது. மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59-வது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது....
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்! 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்
பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 3-வது மற்றும் 4-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆகவே இந்தியா...
வட்டு எறிதல் போட்டி- கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

வட்டு எறிதல் போட்டி- கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
வட்டு எறிதல் போட்டி- கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் சிறப்பாக செயல்பட்டார். அவர் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து 2-வது இடம் பிடித்து அசத்தினார். 66 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தால் தானாகவே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இவர் 64 மீட்டர் தூரம் எறிந்து முதல் 12 இடங்களுக்குள் நுழைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை பெற்றுள்ளார். மற்றொரு வீராங்கனை சீமா புனியா 60.57 மீட்டர் தூரம் வரை எறிந்தார்....
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி- குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா!

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி- குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி- குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா! உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. கடந்த 24-ந்தேதி பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 26 வயதான மணிப்பூரை சேர்ந்த அவர் 49 கிலோ உடல் எடை பிரிவில் 202 கிலோ (ஸ்னாட்ச் 87+கிளீன் அண்ட் ஜெர்க் 115) தூக்கி 2-வது இடத்தை பிடித்தார். 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று மீராபாய் சாதித்தார்.  அதன்பிறகு கடந்த 5 நாட்களாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் இரு...
பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்! பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரநிலை 6) டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்-ஐ (தரநிலை 13) எதிர்கொண்டார். இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12-ம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4-ம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்....
வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!

வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்! வில்வித்தை பிரிவில் இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் அதானு தாஸ் முதல் சுற்றில் சீன தைஃபே-யின் யு-செங் டெங்கை 6-4 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் தென்கொரியாவின் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் முடிவில் இருவரும் தலா ஐந்து செட் பாயிண்ட் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் பெற்றார். இதனால் 6-5 என்ற செட் பாயிண்ட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார். 31-ந்தேதி நடைபெறும் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த டி. ஃப்ருகாவாவை எதிர்கொள்கிறார்....
குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்!

குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் (91 கிலோ எடைக்கு மேல் உள்ள வீரர்கள்) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26. முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார். ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்....