திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: மேகா ஆகாஷ்

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சந்தானம் தற்போது 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது....
இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்!

இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்! தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பதால் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு...
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தீ விபத்து ஒன்றில் சிக்கி தனது முகத்தை முழுவதும் இழந்து அகோரமாக காட்சியளிக்கிறார் சிவா. சிவா இருக்கும் அதே மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு கோமாவில் இருக்கிறார் சக்தி (அதர்வா). முக மாற்று அறுவைசிகிச்சை மூலமாக அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு திரும்புகின்றார்  சிவா. இவரின் அழகை கண்டு இவர் மீது காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். வாழ்க்கை இப்படியாக செல்ல, சிவாவை கொல்ல நினைக்கின்றனர் சிலர். அதன் பிறகுதான் தெரிகிறது, தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிக்கு காரணம் என்று. அந்த சக்தி யார் என்று தெரிந்து கொள்ள அவரின் கிராமத்திற்கு செல்கிறார் சிவா. ப்ளாஷ்பேக் தொடர்கிறது. சக்தி (அதர்வா), ஆர் ஜே பாலாஜி, இந்துஜா மூவரும் நண்பர்கள். நன்கு படித்துமுடித்துவிட்டு ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். திடீரென்று ஒருநாள் இவர்களோடு சேர...