வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Tag: chennai

வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும். ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக:கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும். எந்த சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும். இதற்கு முன்பு ஆங்காங்கே ...
சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் குறைப்பால் பயணிகள் அவதி!

சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் குறைப்பால் பயணிகள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இங்கு பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது. கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதே போல முன்பதிவில்லா டிக்கெட் வ...
என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார். ‘நான் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வரும் போது ஒரு செய்தியாளர் உங்களுடைய பேச்சில் தமிழ்நாடு என்று ஏன் நிறைய முறை குறிப்பிட்டீர்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன் அடிக்கடி நான் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளதை. என்னை அறியாமல் நானும் தமிழன்தான் என்று குறிப்பிட்டேன். பிறகு, காரில் இருக்கும்போது யோசித்தேன். ஏன் தமிழன் என்று கூறினேன் என்று யோசித்தேன். என்னுடைய வாயிலிருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது என்று யோ...
சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.     விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநகராட்சி மேயருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒது...
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது. வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்...