வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: cm eadapadi palanichami

திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி -முதலமைச்சர் பழனிசாமி

திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி -முதலமைச்சர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் (...
TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப் பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்  
ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..! சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடியில் அந்த நினைவு மண்டபம் கட்டப்படுகிறது அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவக பணிகளை பார்வையிட்டார். முதல்வரின் இந்த திடீர் விஜயம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல் தேனி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் புயல் நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. முற்றிலும் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்படும். புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.600 வீதமும், விழுந்த மரங்களை வெட்டி அகற்ற த...
தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் (20-ம் தேதி) பார்வையிட உள்ளேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிவாரண நிதி கோர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது...
பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின்.  வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி. இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி ...
தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி த...