செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: local body election 2022 tamil nadu latest news

பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!

பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க நகரச் செயலாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நகராட்சியாக இருந்த கடலூர், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன. புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கும் கடலூர் மாநகராட்சியில் இருக்கும் 45 வார்டுகளைச் சேர்ந்த 42,479 வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். நேற்று முன்தினம் 30-ம் தேதி கடலூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அதையடுத்து அந்த வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதேசமயம் ...
சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

HOME SLIDER, kodanki darbar, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்...
தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்கிற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் 'வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தாம்பூல தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார். மண்டல அலுவலகத்தின் வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்க...
பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...