புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: Ponniyin Selvan

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா  சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார். நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போது...
‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்...
வைரலாகும் “சோழா சோழா” பாடல் – பொன்னியின் செல்வன்!

வைரலாகும் “சோழா சோழா” பாடல் – பொன்னியின் செல்வன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் "பொன்னி நதி" அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், அறிவித்தபடி "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முத...
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீடு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி!

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீடு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், 5 பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்.. படைக்க முடியாது. இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும். நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நட...
பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவன் – வைரலாகும் கார்த்தியின் போஸ்டர்!

பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவன் – வைரலாகும் கார்த்தியின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ....
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா! கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வ...
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்! மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக இதன் படப்பிடிப்பு பொள்ளியில் நடைபெற்று வந்தது. இதன் படத்தில் நடித்த நடிகர்களும் சமீபத்தில் தங்களுடைய நடிப்பை முடித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து வந்தனர். இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம...
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த ஷாலினி, கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்தார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினிக்கும் அஜித்துக்கு இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணம் முடிந்த பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஷாலினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ...
பொன்னியின் செல்வன்-கார்த்தி கொடுத்த அப்டேட்!

பொன்னியின் செல்வன்-கார்த்தி கொடுத்த அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பொன்னியின் செல்வன்-கார்த்தி கொடுத்த அப்டேட்! கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘சுல்தான்’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் கார்த்தியும், நடிகை ராஷ்மிகாவும் நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதேபோல் நடிகை ராஷ்மிகா, கார்த்தியிடம் பொன்னியின் செல்வன் படம் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு கார்த்தி பதில் கூறியதாவது: “எனது அடுத்த படம் ‘பொன்னியின் செல்வன்’. இரு பாகங்களாக வெளிவரவுள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை, இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ...