பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிவைக்கப்பட்டது.
பொங்கல் ரிலீஸ் வரை நல்ல வசூலில் இருத புஷ்பா படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு, பொங்கல் புதுவரவாக ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய், ‘தேள்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின. பல படங்கள் ரிலீஸ் ஆனாலும் இதில் எந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் செல்ப் எடுக்கவே இல்லை.
ஏற்கனவே கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத இருக்கை சிக்கல். இதன் காரணமாக தியேட்டர்காரர்களின் பார்வை மீண்டு புஷ்பா பக்கம் திரும்பியது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது.
ஃ...
ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா!
பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர்.
இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எதிர்பாராத காரணத்தினால் ‘தேள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில்...
பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா?
பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன் முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
அவையெல்லாம் ஓய்ந்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் பிரபுதேவா ஒரு பெண்ணுடன் சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவருடன் இருக்கும் பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது.
அவர் ஒரு பெண் மருத்துவர் என்றும், பரிசோதனை செய்யப்போனபோது, அவரிடம் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது....
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் பிர...