*லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!*
பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது.
’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.
...
சண்டகோழி 2 விமர்சனம்
விஷால்& ராஜ்கிரண்&லிங்குசாமி கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையையும், ரசிகர் பட்டாளத்தையும் விஷாலுக்கு அள்ளித்தந்த படம் சண்டகோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் சண்டகோழி 2.
இதிலும் விஷால்,ராஜ்கிரண்,லிங்குசாமி கூட்டணி இணைந்திருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்திசுரேஷ் இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், கஞ்சாகருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜேந்திரன், கயல்தேவராஜ், அழகம்பெருமாள், முதல்முறையாக கவிஞர் பிறைசூடன் நடிகராக அவதாரம் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கிறது. அதோடு, விஷாலின் 25வது படம் இது.
கதைப்படி வழக்கம்போல விஷாலின் அப்பா ராஜ்கிரண் ஊர் தலைவர். அந்தபகுதியில் உள்ள சுத்துபட்டி கிராமங்களில் இவர் வைத்ததுதான் சட்டம். மக்களிடம் நல்லபேர் வாங்கியிருக்கிறவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் ப...