சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Russia

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும்...
உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது...
ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 56 நாட்களாக போர் செய்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்  நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேட்டோவில் சேருவதற்கு ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்கும் கனடா நிச்சயமாக தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்....
Ukrainian President Zelenskyy appeals to Russia again for peace talks!

Ukrainian President Zelenskyy appeals to Russia again for peace talks!

HOME SLIDER, ukrain war, World News
  Ukrainian President Zelenskyy appeals to Russia again for peace talks! Ukrainian President Volodymyr Zelenskyy has again appealed to Russia to negotiate an end to the war but says Ukraine would not agree to give up any of its territories for the sake of peace. In his nightly video address to the nation Friday, Zelenskyy appeared to be responding to Col. Russian-backed separatists have controlled part of the Donbas region of eastern Ukraine since 2014, and Russian forces have been battling to seize more of the region from Ukraine, including the besieged city of Mariupol. Gen Sergei Rudskoi, deputy chief of the Russian general staff, who said Russian forces would now focus on "the main goal, the liberation of Donbas." Rudskoi's statement also was a sugge...
Ukrainian cities continue to face Russian attacks

Ukrainian cities continue to face Russian attacks

HOME SLIDER, ukrain war, World News
Ukrainian cities continue to face Russian attacks At least 300 people are feared to have been killed in the bombing of Mariupol's drama theatre, on March 16, according to local authorities, In the month since Russia launched its invasion of Ukraine, troops have yet to capture any major city. The European Union has signed a major gas deal with the US to reduce reliance on Russian energy. US President Joe Biden landed in Poland on Friday, where he attended a humanitarian briefing on Ukraine alongside Polish President Andrzej Duda and met with US troops
உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது கடத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோல் நகரிலிருந்து படைகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்தது. இதையடுத்து, அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், மரியுபோல் நகரிலிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற விரும்பினாலும், சரியான வழித்தடம் இல்லாததால், வெளியேற முடியவில்லை என்று துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். கெர்சன் நகரில் உணவு மற்றும் மருத்துவ விநியோகம் கிடைக்காமல் 3 லட்சம...
#ukraine war – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்!

#ukraine war – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷியா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், ரஷியாவில் எங்களது சேவையை நிறுத்தியுள்ளோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான நெட் பிலிக்ஸ் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது ரஷியாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் டிக்டோக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது....
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளதாவது: ரஷ்யா உக்ரைனை எந்த நாளும் ஆக்கிரமிக்கக் கூடும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிர் இழப்பு ஏற்படும். ஆனால் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் பதிலின் அடிப்படையில், ரஷ்யாவிற்கும் அதிக ராணுவ இழப்பு ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைன் தலைநகர் கெய்வை விரைவாகக் கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயலும் போது 50,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்....
விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை!

விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை! ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார். கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு ‘தி சேலஞ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயு...